முக்கிய செய்தி
பேரூந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை…!
டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப்பிரிவு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் வினவியதுடன், டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இவ்வருடம் கட்டண திருத்தம் இடம்பெறாது என தெரிவித்தார்.பஸ் உரிமையாளர்களும் போக்குவரத்து ஆணைக்குழுவும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தற்போது கட்டணத்தை திருத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.