Connect with us

முக்கிய செய்தி

வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Published

on

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட, வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Govt To Recall Retired Doctors Specialists

இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைத் தேடி அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Govt To Recall Retired Doctors Specialists

இதனால், பல வைத்தியசாலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது