முக்கிய செய்தி
மாணவிகளிடம் மோசமாக நடந்து கொண்ட ஆசிரியர்
குருநாகல் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் புறநகர் பகுதியில் உள்ள கலப்பு பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவரை குருநாகல் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.
குறித்த ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் அந்தப் பாடசாலையில் இணைந்துள்ளார்.
ஆனால், பாடம் நடாத்தும் போது தேவையில்லாமல் முத்தமிடுவதாக பள்ளியின் தொடக்கப் பிரிவு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்