Connect with us

முக்கிய செய்தி

இலங்கை தபால் தினணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை..!

Published

on

இலங்கை தபால் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் தகவல்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.இதுபற்றித் தெரிவிக்கையில், தபால் துறை, அதன் இணையதளம் இதுபோன்ற எந்த ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் உதவவில்லை என்றும், மோசடி செய்பவர்கள் தங்கள் துறையின் இணையதளத்தையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஓர்டர் செய்யப்பட்ட பார்சலுக்கு சிறிய தொகையை செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட இணையதளம் மூலம்ஒன்லைனில் குறுஞ்செய்தி அனுப்பி இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்தச் செயலைச் செய்யும் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் அஞ்சல் திணைக்களம், இது தொடர்பாக ஏதேனும் புகார், விசாரணை அல்லது தகவல்களை பெற 1950 அவசர அழைப்புப் பிரிவு அல்லது அஞ்சல் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது.