முக்கிய செய்தி
பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக புதிய பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சும் , தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய காலை மற்றும் மதியம் ஒவ்வொரு வீடுகளுக்கும் புதிய பசும்பாலை வழங்க திட்டமிட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டமானது இன்று (11) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதே இதன் நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.