Connect with us

முக்கிய செய்தி

மட்டக்களப்பில் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது…!

Published

on

மட்டக்களப்பில் தனியர் வங்கி ஒன்றில் 18 லட்சம் ரூபா மோசடி செய்த வங்கியில் கடமையாற்றிய ஒருவரும் மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக,

16 லட்சம் ரூபாவை மோசடி செய்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உட்பட 3 பேரை கடந்தவாரம் கைது செய்துள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் வங்கி ஒன்றில் கடமையற்றி வந்த வெளிகள உத்தியோகத்தர் ஒருவர்,

வங்கியில் கடன் பெற்றவர்கள் மாதாந்தம் வங்கிக்கு செலுத்தும் கடன் கொடுப்பனவான பணத்தை அவர்களின் வீடுகளுக்கு சென்று அறவீடு செய்து வந்துள்ளார்.

இவர் வங்கி கடனை அறவீடு செய்த பணத்தை வங்கிக்கு செலுத்தாமல் 18 லட்சம் ரூபாவை மோசடி செய்து வந்துள்ள அவருக்கு எதிராக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து குறித்த நபர் தொடர்ந்து தலைமறைவாகி வந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி கைது செய்தனர்.

இதேவேளை திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பவுதாக தெரிவித்து அவரிடம் 16 லட்சம் ரூபாவை மோசடி செய்த,

அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் கிராம அபிவிருத்தி சங்க தலைவரான இளைஞன் ஒருவரும் அவரின் அயல் வீட்டுக்கார நண்பன் உட்பட இருவரை கடந்த 5 ஆம் திகதி கைது செய்தனர்.

இந்த இரு வேறு சம்பவங்களில் கைது செய்தவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை நீதிமன்ற பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *