Connect with us

முக்கிய செய்தி

பிள்ளைகள் எதிர்காலத்தில் இந்தி மற்றும் சீன மொழியைக் கற்க வேண்டும் -ஜனாதிபதி

Published

on

  மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நுகேகொட அனுல வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி , இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றப்பட வேண்டும் என்றார். நாம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நமது குழந்தைகள் ஆங்கிலத்துடன் மேலதிகமாக சீனம் மற்றும் ஹிந்தியையும் கற்க வேண்டும்,” என்றார்.தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறைக்கு பொருந்தும் வகையில் புதிய பாடங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மாட் போன்கள் மற்றும் ஏனைய நவீன தொழில்நுடப சாதனங்கள் மூலம் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும். பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றை நாம் கற்பிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒன்றரை டிரில்லியன்டொலர்களை உலகளாவிய வருவாயைக் கொண்டுவரும். அதில் ஒரு அங்கமாக இருப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை,” எனவும் தெரிவித்துள்ளார்.