முக்கிய செய்தி
வைத்தியசாலையில் மோதல் : இருவர் காயம்!
களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, நோயாளர்களைப் பார்வையிட வந்தவர்களுக்கும் வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் நோயாளர்களைப் பார்வையிடச் சென்ற ஒருவரும் வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தருமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நோயாளர் ஒருவரை பார்வையிட நாகொடை வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் 8 பேர் வைத்துள்ளனர்.இவர்கள் வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.