முக்கிய செய்தி
பல மாவட்டங்களில் தண்ணீர் விநியோகம் தடை
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கண்டி, மொனராகலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது நீர் விநியோகம் நேர அட்டவணை முறையின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக அதன் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனோஜா களுஆராச்சி குறிப்பிட்டார்.
மேலும் குருநாகலுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தவிர நிலைமைகளை பொறுத்து சில மாவட்டங்களுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.