முக்கிய செய்தி
மின்வெட்டு மற்றும் கட்டணங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு
ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மின் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும்,
எதிர்காலத்தில் மின்வெட்டுத் திட்டமிடப்பட மாட்டாது என்றும் மின்சார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன், திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்றி ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகவும்,
தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் முழு கொள்ளளவும் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.