Connect with us

முக்கிய செய்தி

கம்பஹாவில் இரு மாணவிகள் மாயம் …!

Published

on

கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும்,இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.தரம் 11 மற்றும் தரம் 12 இல் கல்வி கற்கும் 16 மற்றும் 18 வயதுடைய இரு மாணவிகள் காணாமல் போயுள்ளதாகவும், கம்பஹா பாடசாலை மாணவி பாடசாலை முடிந்து காணாமல் போனதாகவும் மற்றைய சிறுமி நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வேறு பாடசாலைக்கு செல்வதாகக் கூறி சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிவேரிய மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வசிக்கும் இந்த மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸாரும் வெலிவேரிய பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.