முக்கிய செய்தி
கஞ்சர் இந்தியக் கடற்படைக் கப்பல் வருகை..!
கஞ்சர் இந்தியக் கடற்படைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய கஞ்சர் கப்பல் இன்று கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய கடற்படைக் கட்டளை அதிகாரியான, கிழக்கு கடற்படைத் தளபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏவுகணை செயற்பாடுகள் மற்றும் தொழில்முறை தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் எதிர்வரும் 31ம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய கடற்படை கப்பலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.