உள்நாட்டு செய்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதியறிக்கையை பெற்றார் ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக்க டி சில்வா உள்ளிட்ட உறுப்பினர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்தவற்காக 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐவர் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
ஒன்றரை வருடக்காலமாக சுமார் 650 நபர்களிடம் சாட்சியம் பெற்று விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடந்த 27 ஆம் திகதி நிறைவு பெற்றன.
அதன்படி, குறித்த விசாரணைகளின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது