உள்நாட்டு செய்தி
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளர் பதவி நீக்கம்
தலவாங்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளரை பதவி நீக்க மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.
தவிசாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஆளுநரால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளருக்கு எதிராக அந்த சபையின் உறுப்பினர் ஒருவரால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய மத்திய மாகாண ஆளுநரால் ஒரு உறுப்பினரை கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்ட நிலையில் கிடைக்கப்பெற்ற விசாரணை அறிக்கைக்கு அமைய தவிசாளர் நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த 29 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளர் பதவி நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய தலவாங்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளரை பதவி நீக்குவதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் மத்திய மாகாண ஆளுநரால் வௌியிடப்பட்டுள்ளது.