முக்கிய செய்தி
பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு.
பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K ஜயவர்தன தெரிவித்துள்ளார்.அண்மையில் பாணின் விலையை 2 நிபந்தனைகளின் கீழ் குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்நதது.முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்திருந்தார்.அத்துடன் கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக இடைநிறுத்தத்தையும் நீக்குமாறு, அவர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.