முக்கிய செய்தி
ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு..!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 28 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 314 ரூபா 38 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை நேற்றைய தினம் 297ரூபா 53 சதமாக பதிவாகியிருந்ததுடன் விற்பனை விலை 315 ரூபா 12 சதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.