Connect with us

முக்கிய செய்தி

யாழில் தனியார் வகுப்புகளுக்கு தடை..!

Published

on

யாழ்ப்பாணத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில்  தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.


யாழ்.மாவட்ட சுகாதார அதிகாரிகள்,  பொலிஸார் , தனியார் வகுப்பு உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தரம் 9 இற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு  குறித்த தினங்களில் தனியார் வகுப்புகள் முன்னெடுக்கப்படமாட்டாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுவரிகளின்  மனநலம் கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

.
இதேவேளை, ஒவ்வொரு தனியார் வகுப்புகளும் மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட  வேண்டும் என்றும் ஒவ்வொரு தனியார் வகுப்பிலும் பூரண சுகாதார வசதிகள் காணப்பட வேண்டும் எனவும் யாழ்.மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.