உள்நாட்டு செய்தி
பெருந்தோட்ட மக்களுக்கு பவித்ரா வழங்கிய உறுதி
சகல பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்க அரசாங்;கம் நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வடிவேல் சுரேஸ் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதில் வழங்கிய போதே சுகாதார அமைச்சர் இதனை கூறினார்.
2005 ஆம் ஆண்டு பெருந்டதோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி கிடைத்தாகவும் அதற்கமைய 51 வைத்தியசாலைகள் பொறுப்பேற்கப்பட்டதாகவும் வடிவேல் சுரேஸ் கூறினார்.
ஆனால் அதன் பின்னர் வந்த ஒவ்வொரு அரஙாங்கங்களும் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.
தற்போதும் பெரும்பாலான வைத்தியசாலைகள் தோட்ட நிர்வாகத்தாலே நிர்வகிக்கப்படுவதாகவும் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர்…
“தோட்ட கம்பனிகளிடம் இருந்து வைத்தியசாலைகளுக்கான காணிகளை பெற்றுக் அபிவிருத்தி செய்வதில் சட்டச் சிக்கல் உள்ளது. ஆகவே அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்ள அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும். ஒரு வைத்தியரை உருவாக்க 5 வருடங்கள் செல்லும். ஆகவே ஒரே தடவையில் வைத்தியர்களை உருவாக்குவது சிரமம். இலங்கையில் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு அதிகம்” என்றார்.