உள்நாட்டு செய்தி
ஜெய்சங்கரை சந்தித்த தமிழ் கட்சிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று (07) முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து பேசியுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கா அரசியல் தீர்வு குறித்து இந்தியாவுக்குள்ள கரிசனை குறித்தும் கூட்டமைப்பு இதன்போது நன்றி தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவும் இன்று (07) முற்பகல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்திய தோட்டத்துறை வீட்டு மற்றும் நலத்திட்டங்கள் உடன் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தியுள்ளதாக கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
13 ஆம் திருத்தம், மாகாணசபைகள் தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு வரவேற்கதக்கது எனவும் வெகு விரைவில் இனவாதம் அற்ற இலங்கை உருவாகுவதே தமது நோக்கம் எனவும் கூட்டணி தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்;கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று இலங்கை தொழிலாளர் காங்கிரசும் சந்தித்து பேசியுள்ளது.
இதன்போது மலையகத்தில் இந்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் வீடமைப்பு திட்டம் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.