உள்நாட்டு செய்தி
இழிபறி நிலையில் 1000
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாற்று வழிமுறையொன்றை அமைச்சரவையில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தொழில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சமபள அதிகரிப்பை வழங்குவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இன்றைய பேச்சுவார்த்தையிலும் முதலாளிமார் சம்மேளன பிரதநிதிகள் தமது ஆயிரம் ரூபா கோரிக்கைக்கு இணங்கவில்லை என இ.தொ.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் கூறினார்.
எனவே கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலக இ.தொ.கா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை அரசியல் இலாபத்திற்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்று தருவதாக கூறி தொழிற்சங்கங்கள் நடைமுறை சாத்தியமற்ற பேச்சு வார்த்தைகளில் ஈடுப்படுவதாகவும் முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.