உள்நாட்டு செய்தி
உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய்
உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது.
இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும்.
இந்த நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் அதிக அளவு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.
குரங்குகளிடம் இருந்து நோய் பரவுகிறது என்கிற தவறான எண்ணத்தில் பிரேசில் மக்கள் குரங்குகளை கொலை செய்து வருகின்றனர்.