Helth
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் நிலைப்பாடு

கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நீதியமைச்சர் அலி சபரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த காலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடைய சடலத்தை தகனம் செய்யாமல் குளிரூட்டப்பட்ட அறை ஒன்றில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.