Connect with us

உள்நாட்டு செய்தி

ரிஷாட் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில்

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டயகம சிறுமி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சம்பத்தின் ஐந்தாவது சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ள நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின மனைவி உட்பட மனைவியின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் அத்துடன் இடைத்தரகர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

மேலும்,  டயகம் சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்  மனைவியின் சகோதரர் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுஇருந்தமை குறிப்பிடத்தக்கது.