உள்நாட்டு செய்தி
எரிபொருள் வரிசை குறைவடைந்துள்ளது

நாடளாவிய ரீதியில் எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை சுமூகமான முறையில் இடம்பெறுவதாக தனியார் பௌசர் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்சமயம், நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக பௌசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,எரிபொருளை பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காணப்பட்ட நீண்ட வரிசை
தற்சமயம் குறைவடைந்திருப்பதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சுத் தெரிவித்துள்ளது.