உள்நாட்டு செய்தி
வலுச்சக்தி அமைச்ச்சின் அவசர அறிவிப்பு…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய 92 ரக பெட்ரோலின் புதிய விலை 410 ரூபாயாகவும் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 510 ரூபாயாகவும் குறையவுள்ளதுடன், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என்று அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்தையே அமைச்சு வெளியிட்டுள்ளது.
கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்துக்கு அமைய IOC நிறுவனமும் விலைகளை திருத்தவுள்ளது.
அதற்கமைய 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.
450 ரூபாயாக இருந்த 92 ரக பெட்ரோல் 410 ரூபாயாகவும் 541 ரூபாயாக இருந்த 92 ரக பெட்ரோல் 510 ரூபாயாகவும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.