LPL தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி வெற்றிக் கொண்டுள்ளது. காலி கிலேடியேட்டஸ் அணியை ஜப்னா அணி 53 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது.
நாட்டில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது. சற்று முன்னர் மூவர் கொவிட் தொற்றால் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 78 வயதான ஆண் ஒருவரும், 50 மற்றும் 43 வயதுகளையுடைய...
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த கடன் வழங்கல் 03...
கொவிட் மொத்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 34,447 ஆக உயர்ந்துள்ளது. சற்று நேரத்திற்கு முன்னர் மேலும் 326 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமையவே...
அதிக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளை உடனடியாக சுகாதார அமைச்சு கையேற்று, அவற்றை COVID சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் இடம்பெற்ற COVID-19 தொற்று...
யாழ்.மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 2 ஆவது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதீட்டு திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகர முதல்வர் ஆனோல்ட் தனது...
கொவிட் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 84 மற்றும் 85 வயதான இரு ஆண்களும், 60 வயதான பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி மொத்த மரணங்களின் எண்ணிக்கை 157...
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இந்த மீன் சந்தை திறக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.37 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16.40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
உடனடியாக பாணந்துறை தொட்டவத்த, மொனராகலை படல்கும்பர மற்றும் அலுபொத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.