Sports
ஒரு நாள் தொடரிலும் இலங்கையின் மாயஜாலங்கள் தோற்றன…
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்றிரவு (10) நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதற்கமைய இலங்கையணி 49 ஓவர்களை மட்டும் சந்தித்து 232 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் தனுஸ்க்க குணதிலக்க 55 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், அசேன் பண்டார 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் ஹோல்டர் மற்றும் ஜேசன் மொஹமட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து 233 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 236 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.
அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஹோப் 110 ஓட்டங்களை பெற்றதோடு,எவன் லீவிஸ் 65 ஓட்டங்களையுத் பெற்றனர்.
மேற்படி இருவரின் விக்கெட்டுக்களையும் துஸ்மந்த ச்சமிர கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சாய் ஹோப் தெரிவாகினார்.
இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (12) இடம்பெறவுள்ளது.