உலகம்
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிய தடை
சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இவ்வாறான ஆடைகளுக்கு தடை விதிக்கும் சுவிட்சர்லாந்து சட்டத்துக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு எதிராக 1426992 பேர் வாக்களித்தனர். 1359621 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்தில் விரைவில் தடை அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடை அணிவது அடிப்படை வாதம் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
பிரான்ஸ் ஸ்பெயின் ஜெர்மனி பெல்ஜியம் நெதர்லாந்து ரஷ்யா இலங்கை இத்தாலி பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.