உள்நாட்டு செய்தி
இந்து கலைக்களஞ்சியம் பிரதமர் தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்து கலைக்களஞ்சியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெளியிடப்பட்டது. மஹா சிவராத்திரி தினத்திற்கு இணைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை தொகுத்துள்ளது. இந்து கலைக் களஞ்சியத்தை தொகுக்கும் பணிகள் 1988 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
2014 ம் ஆண்டு அதன் 12 அத்தியாயங்களையும் பூர்த்தி செய்ய அப்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு தலைமைத்துவம் வழங்கினார். 12 வது அத்தியாயம் அடங்கிய இந்து கலைக்களஞ்சியத்தின் புதிய வெளியீட்டை பிரதமர் இந்து சமய குருமாரிடம் கையளித்தார். இதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஆற்றிய சேவைகளை இந்து மத குருமாரினால் பாராட்டப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 இந்து கோவில்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுரேன் ராகவன் ,அங்கஞன் ராமநாதன் ,எம்.ரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.