மலையக மக்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சமாக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விசேட குரல் பதிவொன்றை...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20.05 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி...
தற்போது நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07...
நேற்றைய தினத்தில் மேலும் 202 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து மிகவும் சூட்சமமான முறையில் பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட வந்த நபர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
நியூசிலாந்தின் ஒக்லாந்து பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கத்தியால் தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாவது: “சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி கடந்த 2011ல்...
மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் (Pfizer) தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற COVID ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக...
ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டியை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து செப்டம்பர் 02ஆந் திகதி மரியாதை நிமித்தமாக வரவேற்றார் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் பின்னணியில் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டிற்கான ஐ.நா. குழு ஆகியவற்றுக்கு இடையேயான ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் இது தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கினார். உலக சுகாதார தாபனம் மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளையும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உதவிகளையும் அவர் மேமலும் பாராட்டினார். அமைதி, நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 உட்பட மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்தும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் விளக்கினார். ஐ.நா.வுடனான அடுத்த 5 வருடங்களுக்கான ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னுரிமைகளை உள்ளடக்கிய நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு 2023- 2027 ன் கீழ் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே தயாராகி வரும் செயன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். இது 2030 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிய ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பின் இறுதி சுழற்சியாகும். அமைதி மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளின் அனைத்து அம்சங்களிலும் நாட்டிற்கான ஐ.நா. குழுவின் ஒத்துழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். வெளிநாட்டு அமைச்சு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, எதிர்வரும் 13ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில்...
பாராளுமன்றம் எதிர்வரும் 06ஆம் மற்றும் 07ஆம் திகதிகளில் மாத்திரம் கூடும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும் 06ஆம் திகதி திங்கட்கிழமை...