Connect with us

உள்நாட்டு செய்தி

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம்: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

Published

on

அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி  ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.