கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொவிட் தொற்று...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45.55 இ லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.99 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.65...
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புகள் அமைப்பின் மீதான தடை, தொடர்ச்சியாக நீடிக்கும் என பிரித்தானிய உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. “2000ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்படுவதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது. எனவே, ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியம் உட்பட உலகெங்கிலும் உள்ள ஏனைய 30க்கும் மேற்பட்ட நாடுகளைப் போலவே, தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய இராச்சியத்திலும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாக விளங்குகின்றது. பொதுமக்கள் மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை இலக்கு வைத்த கொடூரங்கள் மற்றும் அட்டூழியங்கள், உலகளாவிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை பாதிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டது. உலகளாவிய ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதானது, சர்வதேச வலையமைப்பின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல், வன்முறைத் தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை தீவிரப்படுத்துதல், இன ஒற்றுமையை சீர்குலைத்தல் மற்றும் அவர்கள் செயற்படும் ஒவ்வொரு நாட்டிலும் ஒருங்கிணைந்த வாழ்க்கையை சீர்குலைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் குறித்த அமைப்பின் எஞ்சிய நபர்களால் தொடர்ந்தும் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்ப்பதனை அங்கீகரிப்பதாகும்....
சீனி மற்றும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ) பொதி செய்யப்பட்டது – 125 ரூபா பொதி செய்யப்படாதது – 122...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 14 ஓட்டங்களால் இலங்கையணி வெற்றிப் பெற்றுள்ளது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
ஆடவருக்கான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற உலக சாதனையை போர்த்துக் கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். உலகக்கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றில், அயர்லாந்து குடியரசுக்கு எதிரான போட்டியில்...
இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் சதொசயில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், மலையகத்திலும் இவ்வாறான நிலைமையே...
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக அவர் கூறினார். அனைத்து...
யாழ்ப்பாணம், அச்சுவேலி, நாவற்காடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. வயலில் வேலைசெய்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் உடுப்பிட்டியைச் சேர்ந்த இரு...
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை (03) தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. COVID-19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில்...