உள்நாட்டு செய்தி
“மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அவதானமாக இருக்க வேண்டும்”
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனப்படும் கொவிக் வைரஸின் சமீபத்திய மாறுபாட்டில் “s” மரபணுவில் சுமார் 30 பிறழ்வுகள் இருப்பதாக கலாநிதி வைத்தியர் சந்திமா ஜீவந்தர கூறுகிறார்.
இதன் காரணமாக மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அவதானமாக இருக்க வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி வைத்தியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியைப் மக்கள் பெறுவதும் கட்டாயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகள் வெற்றியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் போதுமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.