உள்நாட்டு செய்தி
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
குறித்த கைதிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இருந்தே கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பாலித்த சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
50 வருடங்களுக்கு மேலான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 25 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவித்தவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டோரும் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சீர்திருத்தப் பள்ளிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமது தண்டனை காலத்தில் அரைவாசி பகுதியை கழித்தவர்களுக்கும் விடுதலை வழங்க திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பாலித்த சந்தன ஏக்கநாயக்க மேலும் கூறியுள்ளார்.