Connect with us

உள்நாட்டு செய்தி

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காலி, களுத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலி மாவட்டத்தின் நாகொட, நெலுவ மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்தறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவிற்கும், இரத்தனபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, இம்புல்பே, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத்த, நிவித்திகல, கலவான, அயகம மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது