Connect with us

உள்நாட்டு செய்தி

சீரற்ற வானிலை: 20 பேர் உயிரிழந்துள்ளனர்

Published

on

ஆபத்தான வலயங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலையால் 17 மாவட்டங்களை சேர்ந்த 126 பிரதேச சபை பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.