Connect with us

உள்நாட்டு செய்தி

போராட்டத்தை பல்வேறுபட்ட வடிவங்களில் கொண்டு செல்வோம்:இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

Published

on

எமது கோரிக்கைகளை    நிறைவேற்றும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் அரசாங்கத்தால் எமது முன்மொழிவு  திட்டத்தினை  கட்டம் கட்டமாக  நிறைவேற்றுவதாகவும் அதற்கு இடைப்பட்ட காலத்திலே மாதம்தோறும்  ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதாகவும்  தீர்மானித்து அறிக்கைகள் விடப்பட்டு வரும் நிலையில் அதனை ஏற்கப் போவதில்லை என்று கூறி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மஹிந்த ஜயசிங்ஹ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அரசாங்கத்திடம் மானியம் கேட்கவில்லை. எனவே மானியம் வேண்டாம். சுபோதினி குழு அறிக்கையை செயற்படுத்த வேண்டும்.

மதிப்பிற்குரிய மத குருமார்களே,  ஆசிரியர்களே,    நடைபெற்ற  அமைச்சரவை  கூட்டத்தின் பிரகாரம்  அதிபர் ஆசிரியருடைய சம்பள பிரச்சினைக்கு தீர்வை அவர்கள் வழங்கியதாக ஊடகங்கள் வாயிலாகவும் அதேபோன்று அமைச்சருடைய சில கருத்துக்களும் தற்போது ஊடகங்களிலே உலாவிக் கொண்டிருகின்றன. இந்த செய்திகள், விடயங்களைத் தான் இதுவரை நாங்களும் அறிந்து கொண்டு இருக்கின்றோம்.

அந்த கருத்தின் பிரகாரம் தீர்வை அவர்கள் வழங்கியதாக ஊடகங்கள் வாயிலாகவும் அதேபோன்று அமைச்சருடைய சில கருத்துக்களும் தற்போது ஊடகங்களிலே உலாவுகின்றன.  

அந்த கருத்தின் பிரகாரம் 2018ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்ட அந்த யோசனையை அல்லது அந்த தீர்வை தற்போது அமைச்சரவை உப குழு கூடி அந்த அறிக்கையை தான் அவர்களும்  அமைச்சரவைக்கு சமர்ப்பித்து இருந்தார்கள் அந்த தீர்மானத்தின் பிரகாரம் முன்வைக்கப்பட்ட யோசனையும் கூட, எமக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் கட்டம் கட்டமாக அதனை நிறைவேற்றுவதாகவும் அதற்கு இடைப்பட்ட காலத்திலே மாதம்தோறும்  ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதாகவும் அவர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள்.
இந்த தீர்மானத்தை ஒரு போதும்  நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

னென்றால் கடந்த 24 வருடங்களாக நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே எமக்கான முழுமையான சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவாகும்.  அந்த தீர்மானத்தின் பிரகாரம் எமக்கு சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என்றுதான் நாங்கள் உறுதியாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எனவே தற்போது வழங்கப்பட்டுள்ள  கரட் துண்டுகள் போன்ற தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தற்பொழுது  எமது போராட்டம் முடிந்து விட்டதா? போராட்டத்திற்கு  தீர்வு கிடைத்து விட்டதா? என்று சிலர் கேட்கிறார்கள்.  

நிச்சயமாக இல்லை.  எமது முழுமையான தீர்வாக நாம் முன்வைத்த சுபோதினி அறிக்கையின் ஊடாக அந்த தீர்மானத்தினூடாக  எமக்கு முழுமையான அந்த சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும். என்பதில் எமது தொழிற்சங்கங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றது.

பல்வேறுபட்ட வடிவங்களில்  போராடிக் கொண்டிருக்கின்றோம். எனவேதான்  எமது போராட்டம் நிச்சயம் முடியவில்லை. எமது இலக்கை அடையும் வரை எமது போராட்டத்தை பல்வேறுபட்ட வடிவங்களில் நாங்கள் கொண்டு செல்வோம்.

எனவே பல்வேறுபட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சில நபர்கள் இந்தப் போராட்டத்தை குழப்புவதற்காக பல்வேறுபட்ட பொய்யான கருத்துகளை  தற்போது தெரிவித்து வருகின்றார்கள்.

கடந்த காலங்களிலும் இவர்களுடைய செயல்பாடுகள் எமது போராட்டத்தை மழுங்கடித்து காட்டிக் கொடுப்பதாக அமைந்தமையை நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

அதே போல் இக்காலகட்டத்தில் எமது போராட்டத்தை காட்டிக் கொடுப்பதற்காக களவாக வகுப்புகளை நடத்தினார்கள். மொடியுள்  வகுப்புகளிலும் இவர்கள் கலந்து கொண்டார்கள்.

எனவே இவர்களைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை இவர்கள் எமது போராட்டத்தை பற்றி எவ்விதமான கருத்துக்களையும் அறிக்கைகளையும் விடுவதற்கு அருகதையற்றவர்கள். 

எனவே  அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கள் நாங்கள் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை தவிர்ந்த ஏனைய போலியான செய்திகளை நீங்கள் நம்ப வேண்டாம் என்று மிக விடயமாக கேட்டுக்கொள்கின்றோம். சில தீர்மானங்களை எனக்கு தனிப்பட்ட ரீதியாக கூற முடியாது. 

ஏனென்றால் இந்தப் போராட்டமானது 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்துதான் இந்த போராட்டத்தை நாங்கள் நடாத்தி வருகின்றோம். இன்று காலை நாங்கள் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடி அவ்வப்போது  ஊடகவியலாளர் சந்திப்பை நாங்கள் நடாத்தி அதன் மூலம் எமது கருத்துக்களை மக்கள் முன் வைத்து எமது எதிர்வரும் காலங்களில் நாங்கள் முன்னெடுக்கின்ற வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தெளிவாக நாங்க உங்களுக்கு விளக்கம் அளிப்போம். 

சிலர்  தொலைபேசி  ஊடாக தொடர்பு கொண்டு என்னிடம் கேட்கிறார்கள் வலயக்கல்விப் பணிமனை ஊடாக பல்வேறுபட்ட வேலைகளை எமக்கு வழங்குகின்றார்கள். இந்த வேலைகளை நாங்கள் செய்யவேண்டுமா என்று, நிச்சயமாக நீங்கள் எவ்வித வேலைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம். நாங்கள் முழுமையாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம்.

எமக்கு முடிவு கிடைக்கும் வரை அல்லது நாங்கள் உத்தியோகபூர்வமான ஒரு அறிவிப்பை வழங்கும் வரை நீங்கள் இந்த போராட்டத்தில் இணைந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்வைக்கின்றோம். இன்றுடன் எமது போராட்டம் 50 நாட்களைத் தாண்டி தொடர்கின்றது. இந்த போராட்டம் நிச்சயம் வெற்றியில் முடியக்கூடிய ஒரு போராட்டம். நாம் இணைந்து செயல்படுவோம்.

இந்த போராட்டத்தின் வெற்றி உங்களின் ஒற்றுமையிலேயே தங்கியிருக்கின்றது. இதனை முன்கொண்டு செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்தப் போராட்டம் வெற்றி அடையும் வரையில் எம்மோடு இணைந்திருங்கள். போலியான செய்திகள் போலியான தகவல்களை வைத்து குழம்ப வேண்டாம். முகநூல் வழியாக வருகின்ற போலி செய்திகளை வைத்து நம்பிக்கொண்டு எமது போராட்டத்தை மழுங்கடிக்கும் செயல்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிபர் – ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன் அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆசிரியர், அதிபர் வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டது.
கொவிட் பரவல் காரணமாக, இணையவழி முறைமையில்  அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இதற்கமைய, அடுத்த பாதீட்டுடன், சில கட்டங்களின் அடிப்படையில், தீர்வு ஏற்படும் வகையில், ஆசிரியர், அதிபர்களின் வேதனம் அதிகரிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்  தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.