உள்நாட்டு செய்தி
நாவலப்பிட்டி பாரண்டா தோட்டத்தில் போராட்டம்
நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாவலப்பிட்டிய போஹில், பாரண்டா தோட்ட தொழிலாளர்கள் இன்று (14) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு (ஜனவசம) உரித்தான காணியே இவ்வாறு தனி நபருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் பல தசாப்தங்களாக வாழும் மக்களின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.