Connect with us

உள்நாட்டு செய்தி

டுபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டினம்

Published

on

டுபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாயில் சுற்றுலா பயணியரை கவரும் விதமாக பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக டுபாயின் புளுவோட்டர்ஸ் தீவில் ஒரு பிரமாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

‘ஐன் துபாய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் உலகின் உயரமான ராட்டின சக்கரமாக அமெரிக்காவின் லாஸ் வேகாசில் உள்ள ‘ஹை ரோலர்’ ராட்டினம் இருந்தது.

அந்த ராட்டினம் 167 மீட்டர் உயரமானது.

தற்போது கட்டப்பட்டுள்ள இந்த ஐன் துபாய் ராட்டினம் 250 மீட்டர் உயரமானதாகும்.

இது லண்டனில் உள்ள ‘லண்டன் ஐ’ ராட்டின சக்கரத்தை விட இரண்டு மடங்கு உயரமாகும்.

ஐக்கிய அரபு இராஜியத்தின் 50 ஆவது வருட தேசிய தினம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு இந்த ராட்டினம் வரும் திறக்கப்பட உள்ளது.

இந்த ராட்டினத்தில் ஒரு முழு சுற்று வர 38 நிமிடங்கள் ஆகும்.