Connect with us

Sports

“2022”:பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்-அவுஸ்திரேலியா புறக்கணிப்பு

Published

on

அமெரிக்காவுடன் இணைந்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க உள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டு கொண்டிருந்த நிலையில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. 

சீனாவின் மேற்கு பகுதியான சின்ஜியாங்கில் நடந்த சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்காவுடன் இணைந்து  அவுஸ்திரேலியாவும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை  தூதரக ரீதியில் புறக்கணிக்க உள்ளது.