Connect with us

உள்நாட்டு செய்தி

கொரியாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் கலந்துரையாடல்

Published

on

இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை
நேற்று (24) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

வெளிநாட்டு அமைச்சரின் புதிய நியமனத்திற்காக தனது நேர்மையான பாராட்டுக்களை வழங்கிய தூதுவர் வூன்ஜின், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு அமைப்புக்களில் இலங்கைக்கு உதவுவதற்கான தனது நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

கல்வி, விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், மருந்து உற்பத்தி, தொழிலாளர் இடம்பெயர்வு, மக்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பல்தரப்பு ஈடுபாடு உள்ளிட்ட கூட்டுறவு மற்றும் பரந்த அளவிலான ஒத்துழைப்பின் பகுதிகளை மையமாகக் கொண்டதாக இந்தக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இரு நாடுகளுக்கிடையேயான பிரஜைகள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையே நேரடி மற்றும் பயனுள்ள பரிமாற்றங்களை செயற்படுத்துவதற்காக இலங்கையில் கொரிய மொழிக் கல்வியின் அபிவிருத்தியின் முக்கியத்துவம் குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

விரிவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகளுடன் மேலும் பரஸ்பர நன்மை பயக்கும் இலங்கை – கொரிய இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்திய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை மற்றும் அதன் மக்கள் மீதான உணர்வுகளுக்காக தூதுவர் வூன்ஜினுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.