Sports
இலங்கையில் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் பிற்போடல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இலங்கையில் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பாhகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்து பயணிக்கும் வணிக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள பயணதடைக் காரணமாகவே இந்த தொடர் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.