Connect with us

Sports

SLC ரெட்ஸ் அணி T20 போட்டியில் வெற்றி

Published

on

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அழைப்பு T20 தொடரில் தசுன் சானக்க தலைமையிலான கிரேஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

போட்டியில் ரெட்ஸ் அணி 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதற்கமையவே கிரேஸ் அணி முதல் சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற கிரேஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் மினோத் பானுக்க அதிகூடிய 74 ஓட்டங்களை பெற்றார்.

ரெட்ஸ் அணியின் பந்து வீச்சில் அக்கில தனஞ்சய 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து பதிலுக்கு 202 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ரெட்ஸ் அணி 19.4 ஓவர்களை மாத்திரம் எதிர்க் கொண்டு 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதன்படி அந்த அணி 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஓசத பெர்னாண்டோ அதிகூடிய 46 ஓட்டங்களை பெற்றதுடன், ரெட்ஸ் அணியின் பந்து வீச்சில் நுவான் பிரதீப், பத்திரன, புலின தரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *