உள்நாட்டு செய்தி
கல்முனை பிரதான வீதியில் கனரக வாகனம் விபத்து
இவ்விபத்து இன்று (17) அதிகாலையில் இடம் பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த குறித்த கனரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கடையில் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மின்கம்பம் மற்றும் கடையின் முன் பக்கம் சேதமாகியுள்ளது.
இவ்விபத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படாத நிலையில் வாகன சாரதியும் வாகனமும் கல்முனை பொலிசாரினால் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.