Connect with us

உள்நாட்டு செய்தி

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினர் தலவாக்கலை நகரில் போராட்டம்

Published

on

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஜே.வி.பியினர் இன்று (17) தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே.வி.பியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இலவசக் கல்வி பெறும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு இடமளிக்ககூடாது எனவும் கோஷமெழுப்பினர்.

அத்துடன், நாட்டில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு உரம் விநியோகிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பிய ஜே.வி.பியினர், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தனர்.

அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உரிய வகையில் இடம்பெறவேண்டும். அவர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தனர்.