Connect with us

உள்நாட்டு செய்தி

இன்றுபட்ஜட்

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) பிற்பகல் 1.40க்கு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாக கருதப்படுகின்றது.

நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறித்த ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

நாளை (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த முறை வரவுச் செலவு திட்டம் மீதான விவாத நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 2.678 பில்லியன் ரூபாவாகும்.
மேலும் இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே 2,900 பில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டு கடன்களைப் பெறவும் வரவு செலவுத் திட்ட சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.