Connect with us

உலகம்

இத்தாலியில் பிரதமரின் இராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதி

Published

on

இத்தாலியில் பிரதமரின் இராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதி
இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்துள்ளார்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வருடம் ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து, மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின்இ ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அரசியல் நிலவரத்தை பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் படி பிரதமரை அவர் கேட்டுள்ளார்.