Connect with us

உள்நாட்டு செய்தி

தாதியர் தொழிற்சங்கம் 48 மணித்தியாலங்களுக்கு சுகயீன விடுமுறை போராட்டம்

Published

on

தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) காலை முதல் 48 மணித்தியாலங்களுக்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இன்றும் (01) நாளையும் (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக குறித்த தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

நாட்டின் பிரதான தாதியர் சங்கங்களான அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கம், அரச தாதி அதிகாரிகள் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

தாதியர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கான நிகழ்நிலை சந்திப்பின் போது நேற்று இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு தாதியருக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 15,000 ரூபா போக்குவரத்து மற்றும் விபத்துக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளுதல், உரிய செயற்பாட்டினூடாக பதவியுயர்வை வழங்குதல் மற்றும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்துவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.