Connect with us

உள்நாட்டு செய்தி

நுவரெலியா மாவட்டத்தில் தாதியர்கள் பணி பகிஸ்கரிப்பு

Published

on

இலங்கை அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் உட்பட 16 அமைப்புகள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த இந்த போராட்டம் காரணமாக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

நுவரெலியா ஆதார வைத்தியசாலை உட்பட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பதமடைந்தன.

கொவிட் காலத்தில் அர்ப்பணிப்புமிக்க சேவையினை தாதியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் முன்னெடுத்துவரும் நிலையில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள ஓரு துறைக்கு மட்டுமே அனைத்து வரப்பிரசாதங்களும் வழங்கப் படுவதாகவும் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

அரச தாதியர் சங்கம், அரச சுகாதார ஊழியர்கள் சங்கம் உட்பட பல சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப் படுவதாகவும் தமது கோரிக்கைக்கு முறையான பதில்கள் வழங்காவிட்டால் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை நடாத்த வேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இன்றைய பணி பகிஸ்கரிப்பு காரணமாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.