உள்நாட்டு செய்தி
ஓய்வுபெற்ற தாதியர்கள் குறித்து பிரதமர் எடுத்த முடிவு

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) அலரி மாளிகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சிக்கு ஆலோசனை வழங்கினார்.
தாதியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் வேண்டுகோளுக்கமைய நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் சுமார் 34000 தாதியர்கள் இதுவரை தாதியர் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்கள் இதுவரை முகங்கொடுத்துள்ள சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்கள் இதுவரை முகங்கொடுத்துள்ள சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்கள் இதுவரை முகங்கொடுத்துள்ள குறுகிய மற்றும் நீண்டகால தீர்வு காணல் மற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் நோக்கமாகும்.